Breaking News

சிலிண்டர் டெபாசிட் தொகை ரூபாய் 750 உயர்வு!! முழு விவரம்

அட்மின் மீடியா
0

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் ரூபாய் 750 அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது புதிதாக பெறப்படும் இணைப்புகளுக்கு பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ.1,450 இருந்த நிலையில், தற்போது ரூ.750 உயர்த்தப்பட்டு ரூ.2,200 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல் 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டர் வைப்புத் தொகை ரூ.800-லிருந்து ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

14.2 கிலோ எடை 2 சிலிண்டர்கள் இணைப்புடன் புதிய இணைப்பு முன்னதாக   ரூ,2900 செலுத்த வேண்டியிருந்தது.ஆனால், புதிய கட்டண உயர்வின்படி 2 சிலிண்டர்களுடன் புதிய இணைப்புக்கு ரூ.4,400 செலுத்த வேண்டும். கூடுதலாக ரெகுலேட்டருக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அந்தக் கட்டணம் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று ஜூன் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback