Breaking News

6 லட்சம் ரூபாய்க்கு மூட்டை மூட்டையாக 10 ரூபாய் நானயங்களாக கொடுத்து கார் வாங்கிய நபர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த வெற்றிவேல் என்ற இளைஞர் 10 ரூபாய் நாணயங்களை 6 லட்ச ரூபாய் வரை சேமித்து அதனை வைத்து கார் வாங்கியிருக்கிறார்.

ரூ.10 நாணயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எண்ணி தேடித்தேடி சென்று 10 ரூபாய் நாணயத்தை ரூ.6 லட்சம் வரை வெற்றிவேல் சேமித்திருக்கிறார்.

அதன்படி ஒரு மூட்டையில் ₹20,000 முதல் 30,000 வரை என 15க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 480 கிலோ அளவுக்கு 6 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல கார் டீலரை அணுகி அங்கு கார் வாங்க வெற்றிவேல் முற்பட்டிருக்கிறார்.


கார் நிறுவன அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிறகு கார் வழங்க முன்வந்தனர்.இதனையடுத்து சரக்கு வாகனத்தில் மூட்டையாக கொண்டுவந்த ரூ.10 நாணயங்களை தனது உறவினருடன் எடுத்துச் சென்று கார் நிறுவன வளாகத்தில் கொட்டி அதை பிரித்துக் காண்பித்து ஆறு லட்ச ரூபாயை பத்து ரூபாய் நாணயங்களாக வழங்கினார்இதனையடுத்து தெரிவு செய்யப்பட்ட காருக்கான சாவியை கார் நிறுவன அதிகாரிகள் வெற்றிவேலுக்கு வழங்கினர்.காரை பெற்றுக்கொண்ட மனநிறைவோடு வெற்றிவேல் குடும்பத்தினர், அதில் பயணித்து சென்றனர். 


வீடியோ பார்க்க:-

https://twitter.com/airnewsalerts/status/1538445141156933633

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback