அரியலூர் மாவட்டத்தில் 25ம்தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் முழு விவரம்.
அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.06.2022 அன்று நடைபெற உள்ளது.
இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA) , உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை நகல்கள் ஆகியவற்றுடன் கொரோனா தொற்று நடைமுறை விதிகளான முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தவறாது பதிவுசெய்யவும்
கல்விதகுதி:
5 வகுப்பு முதல் 8,10,12. ஆம் வகுப்பு வரை
பட்டபடிப்பு படித்தவர்கள்
ITI. படித்தவர்கள்
Diploma. படித்தவர்கள்
டிரைவர்கள்
பி.இ பொறியியல் பட்டதாரிகள்
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:
25.06.2022 காலை 8 மணி முதல் 3 மணி வரை
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
RAJAVIGNESH HR SEC SCHOOL ,
MELAMATHUR ,
PERAMBALUR TO ARIYALUR MAIN ROAD
Ariyalur - NEAR BY MARUTHAYAN TEMPLE
வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு