Breaking News

இனி வாட்ஸப்பில் ஆதார், பான், லைசன்ஸ், RCபுக், என பெறலாம் டிஜிலாக்கர் சேவை

அட்மின் மீடியா
0

மத்திய அரசு, பொதுமக்கள் தங்களுடைய முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க டிஜிலாக்கர் என்ற பயன்பாட்டை அறிமுகம் செய்தது.

தற்போது இந்த பயன்பாட்டை வாட்ஸ்அப் மூலம் அணுகும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

வாட்ஸ்அப்பின் MyGov ஹெல்ப் டெஸ்க் மூலம் வசதியை மேம்படுத்துவதற்கு அரசு செயல்பட்டு வருகிறது.

பான் கார்டு, 

ஆதார்கார்டு

ஓட்டுநர் உரிமம், 

12ஆம் வகுப்பு, 

பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ், 

RCபுக், 

இருசக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி, 

ஆகியவை வாட்ஸப் மூலம் பெறலாம்


இந்த சேவைகளை வாட்ஸப்பில் நீங்கள் பெற 

முதலில் நீங்கள்   +919013151515 என்ற எண்ணைச் சேமிக்கவும். 

பின் வாட்ஸப்பில் உள்ள அந்த எண்ணுக்கு Namaste or Hi or Digilocker என ஒரு மெசஜ் அனுப்பவும். 

அடுத்து Digilocker Helpdesk வழங்கும் சேவைகளின் பட்டியலை அனுப்பும். 

நீங்கள் பெற விரும்பும் சேவையின் எண்ணை உள்ளிட வேண்டும்.

செயல்முறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதும் டிஜிலாக்கர் ஹெல்ப் டெஸ்க் அனைத்து ஆவணங்களையும் பகிரும். ஆனால் இந்த அனைத்து வழிமுறைகளுக்கும் 

முன்னதாக நீங்கள் டிஜிலாக்கர் செயலியில் ஆவணங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது


டிஜிலாக்கர் சேவையை பயன்படுத்தும் முறை


https://www.adminmedia.in/2020/10/rc.html

https://www.digilocker.gov.in/

இந்த சேவைகளை வாட்ஸப்பில் நீங்கள் பெற வீடியோ

https://twitter.com/MyGovTamilNadu/status/1529026820196433921

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback