வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்கத் தலைவர் மீது மை வீசி தாக்குதல்..!! வீடியோ
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்த 3 வேளான் சட்டமசோதாக்கள திரும்ப பெற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்.
நேற்று பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகேஷ் திகாயத் கலந்து கொண்டார். அப்போது, அவர் முகத்தின் மீது ஒரு சிலர் கருப்பு மை வீசினர். இதனால் இரு தரப்பினரக்கு இடையே மோதல் ஏற்பட்டு, நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ
Tags: இந்திய செய்திகள்