Breaking News

பேராசை பெரு நஷ்டம்...பிட் காயின் முதலீடு என்பது பெரிய ஏமாற்று வேலை- டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள் விழிப்புணர்வு வீடியோ

அட்மின் மீடியா
0

பிட் காயின் முதலீடு என்பது இன்று இணையதளத்தில் பெரிய ஏமாற்று வேலை. உழைத்து சம்பாதித்த பணம், கடன் வாங்கிய பணம் முதலீடு செய்தால் எல்லா பணத்தையும் இழந்து தவிப்பீர்கள் என தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்


அந்த வீடியோவில்

பொதுமக்களுக்கான பதிவு இது. இப்பொழுது இணையதளத்தில் பிட்காயினில் இன்வெஸ்ட் பண்ணவைத்து மோசடி செய்வது நடந்து கொண்டிருக்கிறது. அதனை நம்பி மக்கள் முதலில் சின்ன அமௌண்ட்டை போடுகிறார்கள். அந்த அமௌண்ட்டுக்கு டபுள் அமௌண்ட்டை அவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். அதன்பிறகு இன்னொருமுறை இன்வெஸ்ட் பண்ணுறாங்க. அதற்கும் அமௌண்ட்டை டபுள் செய்து தருகிறார்கள். ஆனால் அடுத்தமுறை இன்வெஸ்ட் பண்ணும்பொழுது இன்னும் அதிகமாக இன்வெஸ்ட் பண்ணுங்க அப்போதான் மெம்பர்ஷிப் கிடைக்கும், என்று பல்வேறு காரணங்களைக் காட்டி பெரிய தொகையை இன்வெஸ்ட் பண்ண வைத்து, பின்னர் ஒன்னுமில்லாமல் பண்ணிவிட்டுறாங்க. 

சென்னை கமிஷனர் சொல்லியிருக்கிறார், இந்த குற்றங்களைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய காவலர்களே பணத்தை விட்டு ஏமாந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனவே இந்தப் பணம் போச்சுனா கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். 

பணம் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போயிருச்சுனா சர்வதேச போலீசாரை நாடவேண்டி இருக்கும். சர்வதேச போலீசாராலேயே ஒன்னும் பண்ண முடியல. சென்னையில் ஒரு காவலர் 20 லட்சம், இன்னொரு காவலர் 30 லட்சத்தை இழந்திருக்கிறார்கள். என கூறியுள்ளார் 

வீடியோ பார்க்க:-

https://www.facebook.com/watch/?v=1057767311536889&ref=sharing

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback