வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் ரத்து -டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதுவழக்கு விசாரணையின் போது, மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீடுகளுக்கு சென்று கொண்டு போய்க் கொடுக்கலாம். மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி திட்டத்தை ரத்து செய்தது.
டெல்லியில் ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியாக ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விநியோகிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து , இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷன் டீலர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். விசாரணையின் முடிவில், மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீடுகளுக்கு சென்று கொண்டு போய்க் கொடுக்கலாம். மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி திட்டத்தை ரத்து செய்தது. அரசால் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்தனர்.
Tags: இந்திய செய்திகள்