Breaking News

அடுத்த சர்ச்சை! மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதி ஆய்வு நடத்த உத்தரவிடகோரி மனு தாக்கல்

அட்மின் மீடியா
0

மதுராவில் தற்போது மசூதி இருக்கும் இடத்தில் கிருஷ்ணர் பிறந்தார் என்று பெரும்பான்மையான இந்து சமூகம் நம்புவதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.



உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி, குறிப்பாக மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கௌரி அம்மன் சிலையை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாவட்டம் மதுராவில் உள்ள சிவில் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள மனுவில்

உத்தர பிரதேச மாநிலதின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. மதுராவை சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தர பிரதேச அரசு அறிவித்தது.

இந்நிலையில் இங்கு கிருஷ்ணர் பிறந்த இடம் என்று நம்பப்படும் ஷாஹி இத்கா மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவிடவிடவேண்டும் என்றும் 

13.37 ஏக்கர் வளாகத்தில் மசூதி கட்டப்பட்டது என்றும், இங்குதான் பகவான் கிருஷ்ணன் பிறந்தார் என்று பெரும்பான்மை இந்து சமூகம் நம்புவதாக அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது 

ஒரு காலத்தில் கோவில் இருந்த இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டுள்ளது எனவும் அந்த மசூதி இந்துக் கோவில் பகுதியில் உள்ள ஒரு கட்டமைப்பு கோவிலுக்கு நிகரானது,அது மசூதிக்கு தகுதியானதல்ல என்றும்

வேறு எந்த மதத்தின் அடையாளமும் இல்லாத நிலத்தில் மசூதி கட்டப்பட வேண்டும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த நிபந்தனையை மசூதி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இந்து தொல்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஆய்வு நடத்துவதற்கு வழக்கறிஞர் கமிஷனரை நியமிக்கக் கோரி மதுரா சிவில் நீதிபதி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன . 

ஏற்கனவே உ.பி.யின் மதுரா கோயிலை கிருஷ்ணஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தானும், அதன் அருகிலுள்ள மசூதியை ஷாஹி ஈத்கா மேனேஜ்மெண்ட் கமிட்டி ஆகியவை நிர்வகித்து வருகின்றன. 

இவ்விரண்டின் இடையே கடந்த 1968 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், கோயிலும், மசூதியும் அருகருகில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இருக்கும் என்பது முக்கியமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை, மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் கடந்த ஜூலை 20, 1973 இல் ஏற்கப்பட்டு பதிவு செய்து செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது

உத்தரப் பிரதேசம் ஞானவாபி மசூதி தொடர்பான விவகாரமே இன்னும் ஓயாத நிலையில், அதேபோல மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback