மேடையில் பாடும்போதே உயிரிழந்த பிரபல பாடகர் பஷீர் !! வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் (78). மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஆழப்புழையில் உள்ள பத்திரப்பள்ளியில் நேற்றிரவு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடல் ஒன்றை எடவா பஷீர் மேடையில் ரசித்து பாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர் . அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் மேடையில் பாடும் போது மரணம் அடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி வைரல் வீடியோ