கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண்களுக்கு ரயிலில் குழந்தைக்கு படுக்கை வசதி - வீடியோ
கைக்குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக ரெயில்களில் குழந்தை படுக்கையை ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்னையர் தினத்தன்று புதிய படுக்கை வசதிகள் தொடங்கப்பட்டன. அவை மடிக்கக்கூடியவை மற்றும் ஸ்டாப்பர் பொருத்தப்பட்டவை ஆகும்.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக தாயின் அருகில் குழந்தைக்கு படுக்கை வசதி கொடுக்கப்பட்டுள்ளது
ரெயில்வே துறை தற்போது சோதனை முயற்ச்சியாக இந்த படுக்கை வசதிகளை பரிசோதித்து வருகிறது, லக்னோ மற்றும் டெல்லியில் இயங்கும் ரயில்களில் இந்த வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
பயணிகளிடம் இதற்கு வரவேற்பு இருந்தால் ரெயில்வே அனைத்து ரெயில்களிலும் குழந்தை படுக்கை வசதிகளை வழங்கும் என்று சப்ரா மேலும் கூறினார்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்