Breaking News

உலக குத்து சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் சரீன்

அட்மின் மீடியா
0

துருக்கியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை




துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடப்பு ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது. 

52 கிலோ எடைப்பிரிவில் தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியை சேர்ந்த நிகாத் சரீன் இன்று நடந்த இறுதி  போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்.

52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார்.

உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்று 25 வயதான நிகாத் சரீன் அசத்தியுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback