Breaking News

மதுரை - தேனி இடையே சிறப்பு விரைவு ரயில் - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

அட்மின் மீடியா
0

மதுரை - தேனி இடையே சிறப்பு விரைவு ரயில் - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!



மே 27ம் தேதி மதுரை - தேனி இடையே வருகிற மே 27ம் தேதி முதல் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி ,ஆண்டிப்பட்டி வழியாக 9: 35 மணிக்கு தேனி ரயில் நிலையத்தை சென்றடையும் . தேனி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6:15 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலானது ஆண்டிபட்டி, உசிலம்பட்டி , வடபழஞ்சி வழியாக மாலை 7.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த விரைவு ரயில் மொத்தம் 12 பயணிகள் பெட்டியுடன் இயங்குகிறது என்றும் இதனால் பொதுமக்கள் பயன் அடைவர் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback