இலங்கையில் 9 வயது சிறுமி ஆயிஷாவை கொலை செய்த நபர் கைது.... முழு விவரம்
இலங்கையில் உள்ள பண்டாரகம, அட்டலுகம பகுதிச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பண்டாரகம, அட்டலுகம பகுதிச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற ஒன்பது வயது சிறுமி கடந்த 27.05.2022 அன்று காலை அருகில் உள்ள இறைச்சி கடைக்கு கறி வாங்க சென்றுள்ளார் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. அதன்பின்பு சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் அதன்பின்பு விசாரனை மேற்கொண்ட போலிசார் அருகில் உள்ள கடைகளில் விசாரித்ததில் சிறுமி கோழிக்கடையில் இருந்து கோழி வாங்கி கொண்டு கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டு வீட்டிற்க்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகின்றது.
சிறுமி பாத்திமா ஆய்ஷா படுகொலை செய்யப்பட்டது ஏன் என இதுவரை மர்மமாக உள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை.இருப்பினும், இன்று இடம்பெறுகின்ற பிரேத பரிசோதனையின் பின்னர் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகின்றது மேலும் சிறுமி காணாமல் போவதற்கு முந்தைய நாள் இரவு அணிந்திருந்த ஆடையை மோப்பம் பிடித்த ஹொரண பொலிஸ் நாயான "டனோ", சிறுமி கோழி இறைச்சி வாங்கச் சென்றதாகக் கூறப்படும் கடைக்கு அருகில் போய் நின்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுமி ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகத்தி அடிப்படையில் விசாரனை வளையத்தில் இருந்த 29 வயதான நபர் தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவருக்கு திருமனம் ஆகி 3 குழந்தைகள் உள்ளார்கள். மேலும் இதுவரை சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை செய்ததற்க்கான காரணம் வெளி வரவில்லை
#JusticeForAyisha
Tags: வெளிநாட்டு செய்திகள்