Breaking News

16 மணி நேரத்தில் பிளாஸ்டிக்கை அழிக்கும் தொழில்நுட்பம் ஜெர்மனி விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!

அட்மின் மீடியா
0

16 மணி நேரத்தில் பிளாஸ்டிக்கை அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்து ஜெர்மனி விஞ்ஞானிகள் அசத்தல்!

 


பொதுவாக பிளாஸ்டிக்குகள் இயற்கையாக சிதைவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே மேலும்  பிளாஸ்டிக் கழிவுகள் உலகில் சுற்றுச்சூழலை பாதிக்கும் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் நிலையில் 16 மணி நேரத்தில் பிளாஸ்டிக்கை அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்து ஜெர்மனி விஞ்ஞானிகள் அசத்தியுள்ளார்கள்

பாலியஸ்டர் ஹைட்ரோலேஸ் (PHL7) எனப்படும் நொதி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட PHL7 ஆனது LLC-ஐ விட இரண்டு மடங்கு தீவிரமானது என்றும்  இந்த நொதி 16 மணி நேரத்திற்குள் பாலிஎதிலின் டெரெப்தாலேட்டை 90 சதவீதம் வரை சிதைக்கும் திறன் கொண்டது.மேலும் இது பிளாஸ்டிக்கை பொடிக்காமல் அல்லது உருக்காமலேயே சிதைக்கும் திறன் கொண்டது என ஜெர்மன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback