Breaking News

வழிபாட்டு தளங்களில் அனுமதி பெறாத ஒலிபெருக்கிகளை 15 நாட்களுக்குள் அகற்ற கர்நாடக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

கர்நாடகத்தில் வழிபாட்டு தலங்களில் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.



கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர் அல்லது பொதுக்கூட்டங்களை நடத்துவோர் 15 நாட்களுக்குள் உரிய முன் அனுமதி பெற வேண்டும். 

அனுமதி பெறாதவர்களின் ஒலிப்பெருக்கிகளை தாமாகவே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட துறையினர் அதனை அகற்ற வேண்டும். 

ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து பல்வேறு நிலைகளில் குழுக்களை அமைக்க வேண்டும்.

போலீஸ் கமிஷனர் உள்ள நகரங்களில் உதவி கமிஷனர், மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும். 

பிற பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதி ஆகியோரை கொண்டு குழு ஏற்படுத்த வேண்டும். 

இந்த உத்தரவு, எங்கெல்லாம் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதோ, பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறதோ அங்கெல்லாம் பொருந்தும். இதுகுறித்து உரிய உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback