Breaking News

FACT CHECK வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்பினால் வெடிக்கும் என இந்தியன் ஆயில் நிறுவனம் செய்தி வெளியிட்டதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சிலதினங்களாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பைக்கில் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்பினால் வெடிக்கும் எனவே பெட்ரோல் டேங்க் புல் பன்னாதீங்க என்று பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

  
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது ஆகும்
 
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி இந்தியன் ஆயில் வெளியிடவில்லை
 
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டது போல் எடிட் செய்யப்பட்டுள்ள செய்தி ஆகும், பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் உலவும் போலி செய்திகள் பட்டியலில் இதுவும் ஒன்று
 
மேலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் எரிபொருள் டேங்க் முழுவதும் நிரப்பப்படுவதால் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக பரவும் செய்திகள் வதந்திகள் என Indian oil நிறுவனம் தன் ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.

ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
 
இதே செய்தி கடந்த 2019 ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியானது அப்போதும் நம் அடமின் மீடியா அந்த செய்தி பொய் என மறுப்பு செய்தி வெளியிட்டது அதனை படிக்க
 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback