Breaking News

FACT CHECK அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 நியூசிலாந்து அரசாங்க தேசிய பாடலா?சர்ச்சில் பாடினார்களா உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  நியூசிலாந்து அரசாங்கம் ஒரு தேசியப் பாடலை உருவாக்கி அப்பாடலை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இசை அமைத்து பாடுகிறார்கள் இதன் சிறப்பு அல்லாஹ்வின் திருப்பெயர்கள்99,ஆகும் இந்தப் பெயர்களை இனிமையான குரலில் பாடும்பொழுது நியூசிலாந்து அரசு முஸ்லீம் மக்களை கண்ணியப்படுத்துவது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது உண்மையான ஜனநாயக அரசு என்பதற்கும் என்பதும்சொன்னாள் அது சூப்பர் நியூசிலாந்து அரசு தான் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 2011 ம் ஆண்டு துருக்கி நாட்டில் நடந்தது ஆகும்

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இசை நிகழ்ச்சி 2011 ஆம் ஆண்டு மே 29 அன்று இஸ்தான்புல்லில் உள்ள ஹாகியா ஐரீன் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது 

அந்த இசை நிகழ்ச்சியை நடத்தியவர்கள்  Fatih Sultan Mehmet Choir என்ற குழுவினர்கள் அல்லாஹ்வின் புகழை பாடி நடத்திய இசை நிகழ்ச்சியாகும் 

அந்த குழுவினர் அன்றைய தினம் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்கள், பல்வேறு நாட்டு பாடல்களை பாடினார்கள் , அதில் இந்த அல்லாஹ் பாடலும் ஒன்று ஆகும்

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் நியூசிலாந்து  அரசாங்கம் தேசியப் பாடல் என  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback