Breaking News

கூகுள் அதிரடி அறிவிப்பு ...கால் ரெக்கார்டிங் ஆப்களுக்கு தடை…!!!! ஏன் தெரியுமா

அட்மின் மீடியா
0

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் குகூள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையில் செயல்படுகின்றன. 


 

ஆண்ட்ராய்டு போன்களில் முன்பு கால்ரெகார்டிங் செய்வது பிளே ஸ்டோர் சென்று மூன்றாம் தரப்பு செயலிகள் ஆப் டவுன்லோடு செய்து அதன் வழியாக செய்து வந்தார்கள், 

இந்நிலையில் பயனர்களில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கூகுள் புதிய முடிவுகளை எடுத்துள்ளது

அதன்படி அதன் பிளே ஸ்டோர் கொள்கைகளை மாற்றி அமைத்திருக்கிறது.மாற்றி அமைக்கப்பட்ட கொள்கை விதிகள் வரும் மே 11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என குகூள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது கூகுள் அதன் Accessibility API-க்கான அணுகலை நீக்குகிறது. கூகுளின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் அனைத்து தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ்களும் அவற்றின் முக்கிய செயல்பாட்டை இழக்கின்றன

இதற்கிடையில் கூகுள் மூன்றாம் தரப்பு கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு தடை விதிப்பதாக தனது புதிய கொள்கைகளை வகுத்துள்ளது.இதனால், பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாது எனத் தெரியவந்துள்ளது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback