Breaking News

மோசடி எஸ் எம் எஸ், ஓடிபி கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0


இன்று பலர் மொபைலில் குறுந்செய்தி அனுப்புவதன் மூலமாகவும், அழைப்புகள் மூலமாகவும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். 



மோசடி நபா்கள் தற்போது பல்வேறு உத்திகளைக் கையாண்டு, பொதுமக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனா் பான் காா்டு மற்றும் கேஒய்சி விபரம் அப்டேட் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பான் எண் பிளாக் செய்யப்படும் 

வங்கி கே ஒய்சி அப்டேட் செய்யவேண்டும் இல்லை என்றால்  வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும் என்று வரும் குறுந்தகவல்களை பொதுமக்கள் நம்ப கூடாது. 

ஒடிபி கேட்கும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம். 

அதேபோல் sms-ல் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டாம். 

மேலும் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெசஜ் மொபைல் எண்ணுக்கு போன் செய்ய வேண்டாம். 

பொதுமக்கள் முகம் தெரியாத நபா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வாட்ஸ்ஆப் , டெலிகிராமிலோ தொடா்பு கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவா்களின் பேச்சை நம்பி பணம் அனுப்ப வேண்டாம். 

மேலும் முக்கியமாக கிரிப்டோ வர்த்தகம், வாட்ஸாப்க்களில் வரும் தகவல்களை நம்பி யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம் என்றும், 

இணையங்களில் வரும் கடன் செயலிகள் மூலம் யாரும் கடன் வாங்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

பொதுமக்கள் எவரேனும் சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் உதவி மையத்தை தொடா்புக் கொண்டு உதவி பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback