ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பணியை தொடர தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணிப்புரிய ஆசிரியர்கள் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டது. மேலும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது.
தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாதவர்களின் ஊதிய உயர்வை நிறுத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையில் இன்று வந்தது.
அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது. மேலும் அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் என்றும் தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் கருத்து தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags: தமிழக செய்திகள்