Breaking News

பீஸ்ட் திரைபடத்திற்க்கு கண்டனம் தெரிவித்த ஜமா அத்துல் உலமா சபை.....

அட்மின் மீடியா
0
பாசிசத்தின் பிரச்சாரக் களமாக திரைப்படங்கள் ஜமாஅத்துல் உலமா கண்டனம்



புனிதமிக்க ரமழான் மாதத்தில் நோன்பு, தானதர்மம் வழங்குதல் முதலிய வணக்க வழிபாட்டில் கூடுதல் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் முஸ்லிம்களை பீஸ்ட் திரைப்படம் மிகுந்த கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

திரைப்பட நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பணம் புகழ் இவை மட்டுமே குறிக்கோளாக இருக்கலாம். அதற்காக சிறுபான்மை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி அதன் மேல் தன் புகழை நிலைநாட்டிக்கொள்ளும் அற்பத்தனமான செயல்களை யார் செய்தாலும் எப்போது செய்தாலும் அது வன்மையான கண்டனத்துக்குரியது.

பாசிசம் நாலுகால் பாய்ச்சலில் தன் அழிவு வேலைகளை இந்தியாவில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் பெரிய அரசியல் கட்சியை தனது பின்புலமாக கொண்டிருக்கும் திராவிட பாரம்பரியத்தில் வளர்ந்த தொழிலதிபர் திரு கலாநிதி மாறன் போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நியாயமற்ற பொய்களைப் பரப்ப கருத்துரிமை என்ற கனமான ஆயுதத்தை பயன்படுத்துவதை கலைத்துறையினர் தவிர்க்க வேண்டும். அக்கறையுள்ள குடிமக்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாசிசத்தை வீழ்த்தவேண்டும் என்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொள்கிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback