Breaking News

கல்லூரி படிப்பை முடித்து 6 மாதத்திற்குள் பட்டம் தர வேண்டும் - யுஜிசி

அட்மின் மீடியா
0

கல்லூரி படிப்பை முடித்து பட்டங்கள் வழங்குவதில் பல்கலைக்கழகங்கள் தாமதம் செய்வதாக நாடு முழுவதுதிலும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளதை அடுத்து பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த சுற்றிக்கையில், 

 


பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்திற்குள்ளாக பட்டங்களை வழங்க வேண்டும். தாமதம் செய்தால் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.எனவே, 6 மாதத்திற்குள் பட்டங்களை வழங்குவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback