Breaking News

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் …!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள ரெயில்வே பணி, அஞ்சலக துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில்க்கு வடமாநிலத்தை சேர்ந்த பலர் 10-ம் வகுப்பு போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.அவ்வாறு அவர்கள் போலியாக சமர்ப்பித்து இருக்கும் சான்றிதழ்களில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து மதிப்பெண் சான்றிதழை பெற்றதுபோல் அச்சிடப்பட்டு உள்ளது. இதில் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களும் ஒரே மாதிரி பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டு வழங்கப்பட்டு இருக்கிறது.



அந்த சான்றிதழில் ‘ஸ்டேட் போர்டு ஆப் ஸ்கூல் எக்சாமினேசன்ஸ் அன்ட் போர்டு ஆப் ஹையர் செகன்டரி எக்சாமினேசன்ஸ் தமிழ்நாடு' என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.அந்தவகையில் இந்த சான்றிதழில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறைகளில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில் அரசு தேர்வுத்துறை ஆராய்ந்து பார்த்ததில், அவை போலியான மதிப்பெண் சான்றிதழ்கள் என்று கண்டறியப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் இதுபோல் போலி மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்தி பல்வேறு மத்திய அரசு பணிகளில் சேர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வரும் தகவல்களும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க அரசு தேர்வுகள் துறை அஞ்சலக துறைக்கு பரிந்துரை செய்து உள்ளது.போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்து உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback