டிவிட்டரை வாங்கினார் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் -எத்தனை கோடி தெரியுமா.....
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும்உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை என்றும் 280 எழுத்துகள் போதாது என்றும் தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது என்றும் எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கி பங்குதாரராக மாறினார். அதன்பின்பு ட்விட்டரின் முழு பங்குகளையும் வாங்கி அதை முழுமையாக கைப்பற்ற போவதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்த நிலையில் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற கணக்கில் 44 பில்லியன் டாலருக்கு (ரூ 3.31 லட்சம் கோடி ) ட்விட்டரை வாங்கியுள்ளார்.எலான் மஸ்க்
Tags: இந்திய செய்திகள்