தொடரும் பேட்டரி ஸ்கூட்டர் விபத்து- 1441 பேட்டரி ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் ஒலா!!!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்த நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், 1400 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்த ஓலா நிறுவனம்
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த மார்ச் 26ஆம் தேதி புனேவில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்துக்குள்ளான ஸ்கூட்டர் இடம்பெற்ற தொகுதியில் உள்ள அனைத்து ஸ்கூட்டர்களின் நிலை குறித்தும் விரிவான சோதனை நடத்தப்படவுள்ளது. எனவே, அந்த 1,441 வாகனங்களை தானாக முன்வந்து திரும்ப பெறுகிறோம்.அந்த ஸ்கூட்டர்களை எங்கள் சேவை பொறியாளர்கள் சோதனை செய்வார்கள். பேட்டரி அமைப்புகள், வெப்ப அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை சோதனைக்குள்ளாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்னதாக ஒகினாவா ஆட்டோடேக் நிறுவனம் 3,000 வாகனங்களையும் ப்யூர்இவி நிறுவனம் 2,000 வாகனங்களையும் திரும்பபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags: இந்திய செய்திகள்