Breaking News

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

 

 

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என்றும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கும்படி, தேர்வுத்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்

2021-2022 ஆம் கல்வியாண்டுக்கு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே மேல்நிலை இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022- க்கான வினாத்தாள்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வெண்டும் என்றும் தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 


 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback