Breaking News

1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை இறுதித் தேர்வு இல்லை என வெளியான செய்தி தவறானது: பள்ளிக்கல்வித்துறை தகவல்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.அதன்படி

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே.6ம் தேதி முதல் மே.30ம் தேதி வரை நடைபெறும், 

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி முதல், மே31ம் தேதி வரை தேர்வு நடைபெறும். 

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே.5ம் தேதி தொடங்கி மே.28ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதர வகுப்புகளுக்கான தேர்வு தேதி குறித்து பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என்று நேற்று செய்தி பரவியது. மேலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரை மட்டுமே ஆண்டுத்தேர்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது

.இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

துதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதல்மைச்செயலாளர் காகர்லா உஷா கூறும்போது, தேர்வுகள் யாருக்கும் ரத்துசெய்யப்படாது. தேர்வு நடைபெறாது என்று வெளிவந்த செய்து தவறானது என்றும், அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback