Breaking News

ரஷ்யா -உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..! உடன்பாடு எட்டப்படுமா!!!!

அட்மின் மீடியா
0

உக்ரைன் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அமைச்சரகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. இதனால் உக்ரைனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா நேற்று முன்தினம் உத்தரவிட்டது.



அதன்படி, 6 வது நாளாக நேற்று உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தது உக்ரைன் ரஷ்யா இடையே நேற்று முன்தினம் பெலாரஸ்-இல் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை பெலாரஸ் அரசு மேற்கொண்டது இதனைத்தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பெலாரஸில் ரஷ்யா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, 

உக்ரைன் பிரதிநிதிகள், ‛உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தரப்பு பிரதிநிதிகளும் சொந்த நாட்டுக்கு திரும்பினர் அடுத்ததாக மிக விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில்

இந்நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை  ரஷ்யா -உக்ரைன் இடையே மீண்டும் நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback