Breaking News

நேட்டோ மீது கண்டனம் தெரிவித்த உக்ரைன் அதிபர் ... முழு விவரம்....

அட்மின் மீடியா
0

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். 

 


நேட்டோவில் இணைய வேண்டும் என்ற உக்ரைனின் விருப்பம் தான் தற்போது நடந்து வரும் போருக்கு மூல காரணம். உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று நினைக்கும் ரஷ்யா, 

உக்ரைனை நேட்டோவில் இணைக்க மாட்டோம் என்று உறுதியளிக்க நிபந்தனை விதித்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், அந்த உறுதியை அளிக்கவில்லை. எனவே, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு இது அவசியம் என்று கூறி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.ஆனால், நேட்டோ படைகளால் உக்ரைனுக்கு எந்த உதவியையும் வழங்க முடியவில்லை. 

 

நேட்டோ நிராகரிப்பு:-

தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார் ஆனால் உக்ரைன் நாட்டில் வானில் விமானங்கள் பறக்க நேட்டோ தடை விதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் அதிபரின் கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது. 

உக்ரைனைப் பொறுத்தவரை நேட்டோவுடன் நட்பு நாடு தானே தவிர, உறுப்பினர் நாடு அல்ல. ஆகவே நிராகரிக்கப்பட்டுள்ளது

 

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கடும் கண்டனம்

இந்நிலையில், தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் விளோடிமர் செலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்

நேட்டோ நாடுகளை நம்பி போர் சூழலை எதிர்கொண்ட உக்ரைன் தற்போது தனித்துவிடப்பட்டுள்ளது.

இன்று முதல், உயிரை இழக்கப்போகும் அனைத்து உக்ரேனிய மக்களுக்கான காரணம், நீங்கள் மட்டுமே.உங்கள் பலவீனத்தாலும் உங்கள் ஒற்றுமை இன்மையாலும் தான், மக்கள் உயிரிழக்க போகிறார்கள்

உக்ரைன் மீது குண்டுவீசுவதற்கு NATO நாடுகளே பச்சைக் கொடி காட்டுகிறது.நீங்கள் உக்ரைனின் வான்வெளியை மூடியிருக்கலாம்.உங்களால் யாரைப் பாதுகாக்க முடியும்? நீங்கள் உண்மையில் NATO-வில் உள்ள உறுப்பினர்களையாவது பாதுகாப்பீர்களா? என்று கூட தெரியவில்லை

ரஷியப் படையின் தாக்குதல் தீவிரம் அதிகரிக்கும் என்றும் தெரிந்தும் புதிய தாக்குதல்களும் இழப்புகளும் தவிர்க்க முடியாதவை என்று அறிந்தும் உக்ரைன் வானில் விமானங்கள் பறக்க நேட்டோ படைகள் மறுப்பது, ரஷியப் படையின் தாக்குதலுக்கு ஆதரவளிப்பதாகவே உள்ளது.உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ரஷியா மேலும் தாக்குதல் நடத்த நேட்டோ பச்சைக்கொடி காட்டியுள்ளது' என்று விமர்சித்துள்ளார்.ஜெலன்ஸ்கி முதன்முறை தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback