Breaking News

தமிழகம் முழுவதும் கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட அனுமதி கிடையாது உயர் நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகள் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

அதனால், தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வனத்துறை அனுமதிக்கக் கூடாது" என உத்தரவிட்டுள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback