டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் நடத்துவது குறித்து மாவட்டந்தோறும் சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும். இதனை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டு இருப்பின் புகார்களை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்
மேலும் புகார் அளிக்க ஏதுவாக தொலைபேசி எண், அலைபேசி எண், வாட்ஸ்அப் எண் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.
அத்துடன் ஆசிரியர்களின் பணியின் தரம், பாடங்களை கற்பிக்கும் விதம், கல்வித்தரம் ஆகியவற்றில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக கல்வித்துறை தலைமை செயலாளர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். என பணியிட மாறுதலை எதிர்த்து தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இத்தகைய உத்தரவையும் கருத்தையும் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்