Breaking News

விமான நிலையத்தில் நேரில் சென்று மாணவர்களை வரவேற்ற தமிழக முதல்வர்

அட்மின் மீடியா
0

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால்  உக்ரைனில் சிக்கித் தவிக்கும், தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர்மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்த மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்று வரவேற்றார்.



நாடு திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிகுழுவை பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில்

உக்ரைனில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாயகம் திரும்பிய கடைசி அணி மாணவர்களை இன்று வரவேற்றேன்.அவர்கள் நம் நாட்டிலேயே தங்கள் கல்வியைத் தொடர உதவவேண்டுமென ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்; உரிய ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும்!

நெருக்கடி மிகுந்த சூழலுக்கிடையே நம் மாணவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர்@DrSJaishankar, இரவுபகல் பாராமல் உழைத்த தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.


https://twitter.com/mkstalin/status/1502523504670826496 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback