தாட்கோ மூலம் விவசாயிகள் மின் மோட்டார் வாங்க மானியம் பெற உடனே விண்ணப்பிக்கவும்
அட்மின் மீடியா
0
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிலம் மேம்பாட்டிற்காக மின் மோட்டார் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்
(தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிலம்
மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில்
புதிய மின் மோட்டார் அல்லது மின் இணைப்பு பெற காத்திருக்கும் விவசாயிகள்
தற்சமயம் டீசல் இன்ஜின் பம்பு பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ள டீசல்
இன்ஜின் பம்பு வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000/- மான்யம்
வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலம் மேம்பாட்டிற்காக புதிய மின்
மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டார் |டீசல்
இன்ஜின் பம்பு வாங்குதல் திட்டத்தில் பயன்பெற /sspatientmவிவom என்ற தாட்கோ
இணையதள முகவரியில் Electric Motor திட்டத்தில் கீழ்கண்ட ஆவணங்களுடன்
விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
1.புகைப்படம்
2. சாதி சான்றிதழ்
3. வருமான சான்றிதழ்
4. குடும்ப அட்டை
5. ஆதார் அட்டை
6. சிட்டா பட்டா அடங்கல், பதிவேடு புலப்பட வரைபடம்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் 24 மணி நேரமும் விண்ணப்பங்களை பதிவு
செய்யலாம். இணையதளத்தில் புதிவு செய்ய இயலாத நபர்கள் நேரடியாக தாட்கோ
அலுவலகத்தை தொடர்புக் கொண்டு பதிவேற்றம் செய்யலாம். என
தெரிவிக்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்