Breaking News

கோவா - வேளாங்கண்ணி வாராந்திர ரயில் சேவை மீண்டும் துவக்கம் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

கோவா நேரடியாக செல்ல திருச்சி வழியாக செல்லும் வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா வாராந்திர ரயில் மீண்டும் இயக்கம்

கொரானா பொது முடக்கம் காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விரைவு ரயில் சேவை கோவாவில் இருந்து மார்ச் 7ம் தேதி முதலும், வேளாங்கண்ணியில் இருந்து மார்ச் 8ம் தேதியும் சேவை துவங்குகிறது.

தமிழகத்தில் இந்த ரயில் நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திங்கள்கிழமை மாா்ச் 7 காலை 9 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்படும் இந்த ரயில் எண் - 17315 செவ்வாய்க்கிழமை காலை 11.40 மணி அளவில் நாகையை அடைகிறது. 

நாகையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 12.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் எண் - 17136  திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், ஈரோடு, சேலம் வழியே வியாழக்கிழமை காலை 3.25 மணிக்கு வாஸ்கோடகாமாவை அடைகிறது.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback