Breaking News

ஊழலுக்கு எதிரான புகார்களை தெரிவிக்க உதவி எண் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் நேற்று பதவியேற்றார்.பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பின் பகவந்த் மான் ஊழலுக்க எதிரான புகார்களை தெரிவிக்க உதவி எண் தொடங்க இருப்பதாக அறவித்துள்ளார்.   
 
 

மேலும் ஊழலுக்க எதிரான புகார்களை  தெரிவிக்க உதவி எண் வருகிற 23-ந்தேதி பகத்சிங்கின் தியாக தினத்தில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.   மேலும் அந்த உதவி எண் என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும்.உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்த வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளை எனக்கு அனுப்புங்கள். ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாப்பில் இனி ஊழல் வேலைக்கு ஆகாது' என்று தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback