Breaking News

உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது ரஷ்யா

அட்மின் மீடியா
0

உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது ரஷ்யா




நேற்று உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10வது நாளாக போர் தாக்குதல் நடத்திவருகின்றது இதனால் அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. அங்குள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் மீட்பு பணிகளுக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை GMT நேரப்படி 6மணி முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் பாதகாப்பாக வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாகவும், மரியுபோல், வோல்னோவகா நகரங்களில் உள்ளூா் நேரப்படி மாலை 6 மணி முதல் தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, ரஷியாவுடனான 3-ஆம் கட்ட பேச்சு திங்கள்கிழமை நடைபெறும் என உக்ரைன் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டேவிட் அரகாமியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback