மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்
அட்மின் மீடியா
0
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 மாநகராட்சி துணை தலைவர், 2 நகராட்சி தலைவர் , 3 நகராட்சி துணை தலைவர் மற்றும் 3 பேரூராட்சி தலைவர், 6 துணை தலைவர் பதவிகளுக்கு திமுக இடம் ஒதுக்கியது.இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் டி.நாகராஜன் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.