ஒரே நாடு,ஒரே தேர்தலை நடத்த தயார் இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
ஒரே நாடு,ஒரே தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார்
ஒரே நாடு,ஒரே தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல பரிந்துரை, ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் தேவை. அது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவெடுக்க வேண்டும். எனினும் தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளது.அதன்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்று சுஷில் சந்திரா கூறியுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்