கார்கிவிலிருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேற உத்தரவு
அட்மின் மீடியா
0
உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற இந்திய தூதரகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து 7-வது நாளாக ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணிக்குள்(இந்திய நேரப்படி இரவு 9 மணி) கண்டிப்பாக வெளியேறி பெசோசின், பாஃபாயி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல கார்கிவ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில் அங்குள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்