Breaking News

BE படிக்க பன்னிரண்டாம் வகுப்பில் Maths, Chemistry படிப்புகள் தேவையில்லை!!AICTE அறிவிப்பு.

அட்மின் மீடியா
0

பொறியியல் படிப்புகளில் சேர இனி 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என AICTE அறிவிப்பு.



பொறியியல் படிப்பில் இயந்திரவியல் பொறியியல் , மின்னியல் பொறியியல் படிப்பு ,சிவில் இன்ஜினியரிங் பொறியியல் படிப்பு, வேதியியல் பொறியியல் படிப்பு, பொருளாதாரம், இயற்பியல், கணிதம் ,புவியியல், கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வகைகள் உள்ளது. இருப்பினும் பொறியியல் படிப்பதற்கு 12ம் வகுப்பில் கணிதம் ,வேதியியல் ,போன்ற பாடங்கள் படித்திருக்கவேண்டும் என்பது இது நாள் வரை இருந்தது.ஆனால் தற்போது 

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE) வெளியிட்டுள்ளது.

அதன்படி,குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE)அறிவித்துள்ளது.

மேலும்,பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல எனவும்,கணினி அறிவியல்,மின்& மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback