Breaking News

இனி உங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் வேண்டாம் தான்....புதிய சட்டத்திருத்தம் – தமிழக அரசு

அட்மின் மீடியா
0

புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் அந்த பகுதி மக்களே தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு.



தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. 

மேலும் மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல்  மாவட்ட ஆட்சியர்கள் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மது விலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. மேலும் இந்த சட்டதிருத்தத்தை தமிழக அரசு  தற்போது அரசிதழில் வெளியிட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback