Breaking News

10வது நாளாக தொடரும் போர்....உருக்குலைந்து போன உக்ரைன்....வீடியோ...இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்.....

அட்மின் மீடியா
0

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 10-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.


இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் உக்ரைனுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

அதே சமயம் ரஷ்யா – உக்ரைன் இடையே இரண்டாம் கட்ட  பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் எட்டாததால் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய முப்ப்டைகளும் உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பக்கத்தில் இருந்தும்  தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடும் விதமாக ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் படைகள் முடிந்தவரை போராடி வருகிறது. தொடர் தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில், ரஷ்யா வீரர்கள் 9,116 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய படைகளின் 251 டாங்கிகள், 33 போர் விமானம், 37 ஹெலிகாப்டர், 217 பீரங்கிகள், 939 பாதுகாப்பு கவச வாகனங்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


அந்த வகையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள இர்பின் நகரில் மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு முன்னதாக ரஷ்யா, மருத்துவமனைகள், தேவாலயங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



https://twitter.com/Odtsaga/status/1499918391779414018


 

https://twitter.com/AfricaUnitNow/status/1499919937787285505

 

 

https://twitter.com/hardhatludwig/status/1499840026254974978

 

 

https://twitter.com/UkraineDiary/status/1499912512606810118

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback