Breaking News

ரஷ்யாவிற்க்கும் உக்ரைனுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை..ஏன் இந்த போர்... காரணம் என்ன....

அட்மின் மீடியா
0

2ம் உலக போர் சந்தர்ப்பத்தில் உலகில் வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, சோவியத் யூனியன்கள்(ஒருங்கிணைந்த ரஷ்யா) விளங்கியது 2ம் உலகப்போருக்கு பின் 1991 ம் ஆண்டில்  பின் சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா அதன் கட்டுப்பாட்டில் அங்கம் வகித்த 15 நாடுகள் பிரிந்தது ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ​​எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் ஆகியவை தனி நாடுகளாகின.

மேலும் சோவியத் யூனியில் அங்கம் வகித்த எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் 2004ல் நேட்டோவில் இணைக்கப்பட்டது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நேட்டோவில்  ஜார்ஜியா, உக்ரைன் நாடுகளை இணைக்க உள்ளதாகவும் உறுதிஅளித்துள்ளது.இதை ரஷ்யாவால் சகித்து கொள்ள முடியவில்லை. 

நேட்டோ என்றால் என்ன ? 

The North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கம்தான் NATO. அதாவது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு என்பது தான், இதன் தமிழாக்கம். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. 

இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீதும் ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.

இந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இணைவதன் மூலம் இக்கட்டான சூழலில் நேட்டோ ராணுவ உதவிகளை பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன.நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அல்லது நேட்டோவுடன் அனுசரணையாக நடந்து கொள்கிற நாடுகள் மீது பிறநாடுகள் தாக்குதல் நடத்தினால் 12 நாடுகளின் ராணுவம் கூட்டாக களமிறங்கும் என்பது அதன் கொள்கை

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்த உக்ரைன், 1991 இல் பிரிந்து தனி நாடானது. 

ஆனால்அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. ஆனால் நேட்டோவில் உக்ரைன் சேர  ரஷ்யா விரும்பவில்லை, அப்படி சேர்ந்தால் உக்ரைனை ரஷ்யாவில் இணைக்கமுடியாது என கருதிய ரஷ்யா அதன மீது போர் தொடுத்துள்ளது

ரஷ்யா எதிர்ப்பு காரணம் என்ன:-

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து உக்ரைன் தனி நாடாக மாறினாலும், உக்ரைனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே ரஷ்யா விரும்புகிறது. அது தன்னுடைய பாதுகாப்பிற்கு அவசியமானது என்றும் ரஷ்யா கருதுகிறது. 

தங்களுடன் எல்லை பகிரும் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என அதன் அதிபர் விலாடிமர் புடின் நினைக்கிறார். இதனால் தான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகள் நோட்டோ படையில் இணைக்க கூடாது. குறிப்பாக உக்ரைனை சேர்க்கவே கூடாது என வலியுறுத்தி வருகிறார்.  


உக்ரைன். நேட்டோவில் உக்ரைன் சேர்ந்துவிட்டால் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் எளிதில் தங்களை நெருங்கிவிட முடியும் என புதின் கருதினார். 

மேலும் அதனால் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது என்றும், ஆயுதங்களை அழித்துவிட்டு நடுநிலை நாடாக மாறவேண்டும் என்றும் புதின் எச்சரித்து வந்தார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக் கொள்ள கூடாது என்று மீண்டும் ,மீண்டும் வலியுறுத்தி வந்தார். ஆனால், ரஷியாவின் கோரிக்கையை அந்த நாடுகள் ஏற்க மறுத்தன. இதனால் தான் நேட்டோவில் உக்ரைனை இணைக்க ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து போரை துவக்கியுள்ளது..ஆனால் உக்ரைன் செவிசாய்க்கவில்லை. இதனால் தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் உக்ரைன் இணைய காரணம் என்ன?

ஆனால் ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி நேட்டோவில் உக்ரைன் இணைய விரும்புவதற்கு பின்னணியில் முக்கிய விஷயங்கள் உள்ளன. 

இதற்க்கு முக்கிய காரணம் அதன் பூளோக எல்லைகள் தான் இந்த மேப்பை பார்த்தால் புரியும்,உக்ரைன் தன்னுடைய ஒருபுற எல்லையை ரஷ்யாவோடும் மற்றொருபுற எல்லையை ஐரோப்பிய யூனியனுடனும் பகிர்ந்து கொள்கிறது. 


2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச்  பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், ரஷ்யா, உக்ரைனின் தெற்குப்பகுதியில் இருந்த கிரிமியா தீபகற்பத்தைக் கைப்பற்றி தன் நாட்டுடன் இணைந்து கொண்டது.

மேலும் கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லூஹான்ஸ் ஆகிய இரண்டு பிராந்தியங்களில் கிளர்ச்சியாளர்கள் உள்ளார்கள்  இதனால் அவ்வப்போது உக்ரைனுக்கும் , கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் ஏற்படுவது உண்டு. இந்த மோதலில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவுவதும் உண்டு. இதனால் தான் ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்னை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் மேற்குலக நாடுகளின் உறவை பெரிதும் விரும்புகிறார். உக்ரைனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடலாம் என்று நம்பும் மேற்குல நாடுகள், நேட்டோ எனும் ராணுவக் கூட்டணியில் உக்ரைனை இணைக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. 

ஏற்கனவே தன்னுடைய அண்டை நாடுகளான போலந்து, லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நிலையில், மற்றொரு அண்டை நாடான உக்ரைனும் நேட்டோவில் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. 

அதேசமயம் உக்ரைன் அதாவது நேட்டோவில் இணைவதன் மூலம் உக்ரைன் நாட்டிடம் எல்லை பிரச்சனையில் வாலாட்டும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுப்பதோடு, கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களை சமாளிக்கலாம் என உக்ரைன் நம்புகிறது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback