திடீரென முடங்கிய டுவிட்டர் வலைதளம் - அவதியடைந்த பயனாளர்கள்
அட்மின் மீடியா
0
உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைதள சேவை திடீரென முடங்கியது.
நேற்று நள்ளிரவு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவிட்டர் தளம் முடங்கியது.இதனால், ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை பதிவு செய்வதிலும், தகவல்களை பார்ப்பதிலும் பல சிக்கல்களை சந்தித்தனர்.
பிறகு டுவிட்டர் வலைதளம் செயல்பாட்டிற்கு வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது மேலும் தொழில்நுட்ப கோளாறுக்கு பயனாளர்களிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்