24 மணி நேரத்தில்…வங்கக்கடலில் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! சென்னை வானிலை ஆய்வுமையம்
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
02.03.2022 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் ,தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்
மார்ச் 3 ஆம் தேதி அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
4ஆம் தேதி அன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் , திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்