Breaking News

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்கள் 218 விவரம் இதோ !

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது



அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:

மொத்த பதவியிடங்கள்: 1374

திமுகவைச் சேர்ந்த 4 பேர் போட்டியின்றி தேர்வு: 4

நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:

மொத்த பதவியிடங்கள்: 3843

போட்டியின்றி தேர்வானவர்கள்: 18

நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியில் திமுகவைச் சேர்ந்த 15 பேரும் மற்ற கட்சிகளை சேர்ந்த 3 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்

பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:

மொத்த பதவியிடங்கள்: 7609

போட்டியின்றி தேர்வானவர்கள்:196

தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 7412

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் திமுகவைச் சேர்ந்த 101 பேரும், காங்கிரஸ் கட்சியின் 6 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 12 பேரும், பாஜகவைச் சேர்ந்த 3 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback