Breaking News

நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணைய இணையதளத்தில் காணலாம்

அட்மின் மீடியா
0
தமிழக நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்: https://tnsec.tn.nic.in/result/election_urban2022/index.php

 
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளும் வகையில் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489
பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 மற்றும் மறுவாக்குப்பதிவு 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் 21.02.2022 ஆகிய நாட்களில் நடைபெற்றுள்ளதை தொடர்ந்து, பதிவான வாக்குகள், 268 வாக்குஎண்ணும் மையங்களில் 22. 02:2022 அன்று காலை 8.00 மணிக்கு எண்ணும் மையங்களில் துவங்க உள்ளது. 


தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால், வாக்கு எண்ணும் மையங்களில், அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரியான https://tnsec.tn.nic.in-ல் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆணைய இணைய முகவரி




மேல் உள்ள லின்ங்கில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் காணலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback