Breaking News

2022 பட்ஜெட் சிறப்பம்சங்கள் முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

 
 
 
2022 பட்ஜெட் சிறப்பம்சங்கள்

நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன் படும் வகையில் வந்தே பாரத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்

நடப்பு நிதியாண்டில் 25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும்

காவிரி -கோதாவரி-பெண்ணாறு - உள்ளிட்ட ஐந்து நதிகள் இணைப்புதிட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

அவசரகால கடனுதவி திட்டம் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படும்
 
நீர்பாசனத் நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்ற ரூபாய் 44 ஆயிரம் கோடிஒதுக்கீடு செய்யப்படும்

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி மேற்கொள்ளப்படும்
 
5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்

நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்
 
2022- 2023 ஆம் நிதியாண்டில் சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இந்தியாவின் முதன்மை வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இந்த டிஜிட்டல் கரன்சி பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இந்த டிஜிட்டல் கரன்சி வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கும். அந்த விதிமுறைகளை விரைவில் வெளியிடப்படும் 

நாடுமுழுவதும் உள்ள 2 லட்சம் அங்கன்வாடிகள்  தரம் உயர்த்தப்படும்

நாடு முழுவதும் நில பத்திரங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை வேகப்படுத்தப்படும் ஒரே நாடு ஒரே பதிவு மூலம் நாடு முழுவதும் சரியான பத்திரப்பதிவை உறுதி செய்யப்படும்.
 
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாடத்திட்டம் ஊக்குவிக்கப்படும்   அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும்
 
3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு
 
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கும் உதவும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு வட்டி எதுவும் இல்லை
 
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 18 லட்சம் புதிய வீடுகள் கட்ட 48,000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
 
தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

வரும் ஆண்டு முதல் சிப் பொருத்தப்பட்ட மின்னணு பாஸ்போர்ட் வசதி அறிமுகப்படுத்தப்படும்
 
தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 5ஜி அலைகற்றை ஏலம் 2022ல் மேற்கொள்ளப்படும்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback