நகர்புற உள்ளாட்சி தேர்தல் 18, 19-ம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிப்ரவரி 18, 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ளது
மேலும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 18 ஆம் தேதியன்று தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் தவிர பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும், 50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் பள்ளிகளுக்கு பிப்.18ஆம் தேதியும் விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்