Breaking News

FACT CHECK கொரானா தடுப்பூசிகளை திரும்பப் பெற வேண்டும் என பில் கேட்ஸ் சொன்னாரா? உண்மை என்ன.....

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பில் கேட்ஸ் வாக்குமூலம் அனைத்து மாற்று பிரபஞ்சத்திலும் அனைத்து கோவிட் 19 தடுப்பூசிகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று பில் கேட்ஸ் கோரியுள்ளார் என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியினை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கூறவில்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  பில் கேட்ஸ் கூறியதாக இந்த தகவல்கள் வைரலாகி வருவது தெரியவந்துள்ளது. இவை நகைச்சுவை வலைதளம் ஒன்றில் கேலியாக பதிவிடப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு உருவாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியின் உள் உள்ள லின்ங்கில் கீழே Source  என்ற லின்ங் உள்ளது , அப்படியானல் அந்த செய்தியினை பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி சேனல் வெளியிட வில்லை என தெரிகின்றது, மேலும் அதில் உள்ள Source  லின்ங்கை கிளிக் செய்தால் ஒரு லிங்க் வேலை செய்யவில்லை, மற்ற லின்ங்கில் பில் கேட்ஸ் பற்றிய பல செய்திகள் பொய்யாக பரவுகின்ரது ஆனால் அனைத்தும் பொய் என ஆதாரத்துடன் உள்ளது


மேலும் இந்த செய்தி பற்றி  நம்மை போல் பல உண்மை கண்டறியும் செய்தி சேனல்கள் அந்த செய்தி பொய் என ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்கள்





முதலில் நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். பில் கேட்ஸ் அவர்கள் கொரானா தடுப்பூசி போட்டுகொள்லவேண்டும் என்றுதான் பல இடங்களில் கூறியுள்ளார் ஆதாரம்...

கடந்த 22.10.2021 அன்று இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதற்க்காக பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்திருந்தார் 

பில்கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உலகளவில் தடுப்பூசி தயாரிக்க சுமார் 250  மில்லியன் டாலர் பணம் முதலீடு செய்துள்ளது ஆதாரம் 
உண்மை நிலை இப்படி இருக்க யாரோ வேண்டும் என்றே  பில்கேட்ஸ் இதை சொன்னார், அதை சொன்னார் என பரப்பி வருகின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்






Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback